விழுப்புரத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நண்பனின் இறப்பு செய்தி கேட்ட நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த கமல்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிர் நண்பனான கமல்ராஜின் இறப்புச் செய்தியை கேட்ட ஞானவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஞானவேல் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.