உலக நாடுகள் தொழில் தொடங்க இந்தியா சிறந்த இடமாக மாறி வருகிறது எனத் தமிழகஅmய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இசை அகாடமியில் நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், 32-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின் கல்லூரி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர்,
மாணவர்களிடம் எப்போதும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்பட வேண்டும் எனக் கூறினார். டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் சரக்குப் போக்குவரத்து முனையத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், உலக நாடுகள் தொழில் தொடங்குவதற்கு இந்தியா சிறந்த இடமாக மாறி வருகிறது எனவும் குறிப்பிட்டார். வறுமையால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 150 நாடுகளுக்கு இந்தியா மருத்துவமனை வழங்கி வருகிறது எனவும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.