பிரதமர் மோடி தலைமையிலான நிலையான ஆட்சிக்கு, குஜராத்தை சேர்ந்த 45 அரச வாரிசுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், அரச வாரிசு மந்ததாசிங் ஜடேஜா தலைமையில் சமஸ்தானங்களின் சிந்தனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்தகொண்ட 45 பழமையான சமஸ்தானங்களின் வாரிசுகள், தேசிய நலனுக்காகவும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற அவருக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ்கோட் அரச வாரிசு மந்ததாசிங் ஜடேஜா, 2024 தேர்தல் நமது அடுத்த தலைமுறை, இந்திய கலாச்சாரம் மற்றும் சனாதன தர்மத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கானது என்றார்.
க்ஷத்ரிய சமூகத்தினரின் தற்போதைய போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.