தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
பஞ்சாங்கத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் காலம், வரும் 28-ம் தேதி வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.