திருநெல்வேலியில் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் நாட்களின் திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் ஓ.ஆர்.எஸ் கரைசல்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.