ஆந்திராவில் ரயிலில் கடத்த முயன்ற 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நால்வரைக் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் பலாசா ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உட்கார்ந்திருந்த நால்வரிடம், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது 102 கிலோ உயர்ரக கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.