கோடை வெயில் வாட்டி வதைப்பதால், வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க திருப்பூர் மாநகராட்சி சார்பில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால், சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால், இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து சிக்னல்களிலும் அமைக்கப்பட உள்ளன.