ஐக்கிய அரபு அமீரகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. துபாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், துபாயில் மீண்டும் கன மழை பெய்ந்து வருவதால், சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.