கடலூரில் கோடை வெயிலின் காரணமாக முந்திரிப் பூக்கள் கருகி உதிர்ந்ததால் கடும் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி சுற்றுவட்டாரங்களில் முந்திரி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக, முந்திரிப் பூக்கள் கருகி உதிர்ந்து போனது. இதனால் விளைச்சல் இருக்காது என்பதால் விவசாயிகள் கடும் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.