கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட வேலை காரணமாக வாக்களிக்க முடியவில்லை என்றும், இதுவரை வாக்களிக்காமல் இருந்தது இல்லை எனவும் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் திரைப்படத்தில், ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும் என்றார்.
அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, குழந்தைகளின் படிப்பு முக்கியம் என்பதால், தற்போது அரசியல் வர விருப்பம் இல்லை என நடிகை ஜோதிகா தெரிவித்தார்.