நெல்லையில் இருந்து அயோத்தி வரை உள்ள புண்ணிய தலங்களுக்கென்று சென்று வரும் வகையில், பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் தென்மண்டலம் சார்பில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் கொண்ட பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில், ஜூன் 6ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
மொத்தம் 9 நாள் சுற்றுப்பயணத்திற்கு, நபர் ஒன்றுக்கு 18 ஆயிரத்து 550 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு www.irctctourism.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.