ராமநாதபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, இரண்டாம் போக நெல் விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயல், கூரியூர், சத்திரக்குடி மற்றும் திரு உத்திரகோசமங்கை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு 1.72 லட்சம் ஹெக்டேரில் இரண்டாம் போக நெற்பயிர் செய்யப்பட்டுள்ளது.
இதனால், வயல்கள் எல்லாம் திரும்பி திசை எங்கும் பசுமை போர்த்தியது போல காட்சியளித்து வருகிறது. கோடை வறட்சியை தாங்கி 90 நாட்களில் மகசூலை அள்ளித்தரும் ரக நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இதனால், டெல்டா மாவட்டங்களுக்கு நிகராக விரைவில் அதிக மகசூல் எடுப்போம் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.