அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. மூலம் 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில், இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் பணி நியமனம் நடைபெற்றதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி, மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட்டுள்ளது.