தேனி அருகே ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் 60 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் தனவந்தன், ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிலேயே மூழ்கியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டும், பல நபர்களிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார்.
தந்தையிடமும் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் இவர் கடன் வாங்கியுள்ளார். சுமார் 60 லட்சத்திற்கு மேல் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால், விரக்தியடைந்த தனவந்தன், வீட்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.