கர்ப்பிணிப் பெண் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், உடல் பிரேத பரிசோதனை முடிந்து கொண்டு செல்லப்பட்டது.
சென்னையில் இருந்து புறப்பட்ட கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாச்சலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரி எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கஸ்தூரி உயிரிழந்த நிலையில் கஸ்தூரியின் தாய், தந்தை மற்றும் சகோதரரிடம் திருச்சி உட்கோட்ட இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து உயிரிழந்த கஸ்தூரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கொண்டு செல்லப்பட்டது.