ஆப்பிரிக்கத் தொழிலாளர்களை சீனாவை சேர்ந்த நபர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்திரிக்கையாளர் டாம் லூக்ரே தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மேலாளர் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆப்பிரிக்க தொழிலாளர்களை கண்மூடித்தனமாக தாக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.