பெரம்பலூரில் மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் யோகா பயிற்றுவிக்கப்பட்டது.
பெரம்பலூர் அறிவுத்திருக்கோவிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமினை, அறக்கட்டளையின் செயலாளர் சாந்தகுமார் துவக்கி வைத்தார்.
இதில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக, யோகா, தியானம் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மிக ஆர்வமுடன் பயிற்சிகளை செய்தனர்.