தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் விமான நிலைய ஓடுபாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியில் ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக, ஆறு இடங்களில் வனத்துறையினரால் கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஷம்சாபாத் விமான நிலைய ஓடுபாதைக்குள் உலாவிய சிறுத்தை, வனத்துறையினரால் அமைக்கப்பட்ட கூண்டில் இருந்த ஆட்டை பிடிக்க முயன்றபோது சிக்கிக் கொண்டது.