திருப்பூரில், மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்த 2 பேர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் – மங்களம் சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கஞ்சா போன்ற பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பைக்கில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், மாட்டு சாணத்தை கஞ்சா என கூறி விற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொர்பாக, லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.