திருக்கோயில்களின் பராமரிப்பின்போது பொது மக்களின் பங்கு குறித்து வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை நீதியரசர்கள் ஆர். மகோகதவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் உள்ளடக்கிய சென்னை உயர் நீதிமன்ற நடுவர் அமர்வு வழங்கியுள்ளது.
திருக்கோயில்களின் உழவரப் பணிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைச் சேர்ந்த இடங்களில் மக்களின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான வழிகோட்டுதல்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கோயில்களில் உழவரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கைகளை முறையிடலாம். பொது மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, இணை ஆணையர் 7 நாட்களுக்குள் அவர்களது கோரிக்கையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.
திருக்கோவில்கள் வளாகம், குளம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தோட்ட பராமரிப்பு பணிகள், கதவுகளில் வண்ணம் பூசும் பணிகள் முதலியவற்றை செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு.
ஆனால், திருக்கோவில் சீரமமைப்பு பணிகளை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
உழவரப் பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு, திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த உரிமையும் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் பராமரிப்பு பணிகள் சோர்ந்த நடவடிக்கை எடுக்கவும், அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, நிபுணர்களின் பரிந்துரைகளோடு கதவு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருக்கோவில் இணை ஆணையரை அணுகி உழவர பணி மேற்கொள்ளவும் , திருக்கோயில்கள் முறையாக பராமரிக்கபடுவதன் மூலம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவற்ரை பாதுகாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த வழிமுறைகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
இதன் மூலம் பொது மக்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஆகிய இரு தரப்பும் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.