ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்ததால், அத்தியாவசிய தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் தொட்டி கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்துள்ளது. இதனால், தண்ணீர் இன்றி கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், காவிரி கூட்டு குடிநீரும் முறையாக வராததாலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்பாட்டில் இல்லாததாலும், ஒரு குடம் குடிநீர் 15 ரூபாய்க்கு வாங்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. சின்டெக்ஸ் தொட்டியை உடனடியாக மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.