சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிராவல் மண் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் சோதனை செய்தபோது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இரண்டு டிப்பர் லாரி மற்றும் இரண்டு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, லாரியின் உரிமையாளர் மதிவாணன், ஓட்டுநர் ராஜா ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்ற லாரி ஓட்டுனர்களையும் தேடி வருகின்றனர்.