கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நீலமலையின் அடிவாரபகுதி, மிக நீண்ட வனப்பரப்பை கொண்டதாகும். இங்கு வாழும் குரங்குகள், யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள், கோடை வெயிலில் தண்ணீரின்றி தவித்து வருகின்றன.
இதனால் நீலகிரி செல்லக்கூடிய கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகளிலும், தண்ணீர் தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் தாகம் தீர்க்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.