கும்பகோணத்தில் ஊர் பொதுக் குளத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
புளியம்பாடி கிராமம், மேலத்தெருவில் உள்ள ஊர் பொதுகுளத்தை சுரேந்தரன் என்பவர் ஏலத்தில் எடுத்து அதில் மீன்கள் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் குளத்தில் உள்ள ஏராளமான மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதப்பதைக் கண்டு சுரேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் உள்ள நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.