சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் நடைபெறுவதால், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.