சென்னை பம்மல் தனியார் மருத்துவமனையில், மகன் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு விரைந்து விசாரணையை முடிக்க புதுச்சேரி முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன், உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர், முதலமைச்சர் ரங்கசாமியை அலுவலகத்தில் சந்தித்து, தமிழக அரசு விரைந்து விசாரணையை முடிக்க அழுத்தம் தர வேண்டும் என மனு அளித்தனர்.