நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றித்திரிவதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ பதிவுகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் கரடியை கூண்டு அமைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.