காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் என்றும் மொத்த சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.