எட்டாம் வகுப்பு மாணவி இயக்கிய அனிமேஷன் படத்திற்கு நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது.
நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த வாரம் நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவி அகஸ்தி இயக்கியிருந்த குண்டான் சட்டி என்ற அனிமேஷன் திரைப்படம் சிறந்த படமாக தேர்வு தேர்வு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டது. தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி அகஸ்தி தெரிவித்துள்ளார்