கன்னியாகுமரியில் தனியார் வங்கியில் ஒருவர் போதையில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்லுக்கூடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்குள் புகுந்த போதை நபர், அங்கிருந்தவர்களிடம் கம்பியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரிடம் பேச்சு கொடுத்து லாவகமாக அவரை வங்கியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.