நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் எம்எல்ஏ ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான கடிதத்தில் உள்ளது பொய்யான தகவல் எனவும், தனக்கு வேண்டாதவர்கள் யாராவது, தன் மீது பழி சுமத்துவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், விரைவில் உண்மை என்ன என்பது வெளிவரும் எனவும் உறுதி தெரிவித்தார். மேலும், ஜெயக்குமார் தனசிங்குக்கும், தனக்கும் எந்த விதத்திலும் பணம் கொடுக்கல் – வாங்கல் கிடையாது எனவும், அரசியலில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் ரூபி மனோகரன் விளக்கமளித்தார்.