2024 ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் மே மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்றும் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் அன்றே வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. சுமார் 39 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.