மயிலாடுதுறை அருகேயுள்ள கிழாய் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சேதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சாலைக்கு வர்ணம் பூச வந்த தொழிலாளர்களை பொதுமக்கள் திருப்பி அனுப்பினர்.
தரமற்ற முறையில் சாலை அமைத்ததால், பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.