தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அண்மையில் உதகையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 8 பேர் முதல் பரிசையும்,7 பேர் இரண்டாம் பரிசையும், 9 பேர் மூன்றாம் பரிசையும் வென்றனர். இந்த நிலையில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு, மானாமதுரை ஆனந்தவள்ளியம்மன் கோவில் அருகே உற்சாக வரவேற்பளித்தனர்.