இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், நீட் தேர்வெழுத ஆர்வமுடன் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோபாலபுரத்தில் டிஏவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள நீட் தேர்வு மையத்தில், தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் வானிலையை கருத்தில் கொண்டு, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையங்களுக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.
மாணவர்களை சிறந்த மருத்துவராக்க நீட் தேர்வு அவசியம் என பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.