அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மருக்காளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகனின் மனைவி கனிமொழிக்கு, தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், சிவாவுடனான உறவை கனிமொழி திடீரென துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவா, ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.