மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தலைச்சங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிக் கொல்லை மாரியம்மன் கோயிலில், தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.