சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் புலி ஒன்று 4 குட்டிகளுடன் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புலிகளின் வசிப்பிடம் குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.