கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால், பல பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயிலில் இருந்த தப்பிக்க கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக திற்பரப்பு அருவியில், சுற்றுலாப் பயணிகள் பல நேரம் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.