முல்லை பெரியாறு அணையில், கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் தற்போது 115.05 கன அடியாவும், பாசனத்திற்காக 105 கனஅடியாக நீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சர்வதேச குழுவை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்துமாறும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.