சிறைக்கு செல்ல தயாராக உள்ளதாகவும், அதேவேளையில், தான் வெறுக்கும் ஒரு குற்றத்திற்காக சிறைக்கு செல்ல விரும்பவில்லை என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் திரைப்பட இயக்குநர் அமீரிடமும் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய அமீர்,
தன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை 2 நாட்கள் நடைபெற்றதாகவும், அமலாக்கத் துறையிடம் இருந்து முதல் சம்மன் வந்ததே தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
அடுத்தவர் பணத்தை நம்பி வாழ தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதேசமயம் தான் வெறுக்கும் ஒரு குற்றத்துக்கு சிறைக்கு செல்லவும் விரும்பவில்லை என்றார்.
சமூகத்தை சீரழிக்கும் ஒரு செயலுடன் தன்னை தொடர்புபடுத்தும் போது, தன்னுடைய குடும்பம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வழக்கு முடியும் வரை அலுவலகத்தில் தான் இருப்பேன் என்றும் அமீர் கூறினார்.