ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தொட்டம்பட்டி பகுதியில் கனிமவளத்துறை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில் 5 யூனிட் செம்மன் கடத்தியது தெரியவந்தது.
இதில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் அறச்சலூர் சாலையிலும் அதிகாரிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட ராஜீவ்காந்தி என்பவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.