கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 58 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால், தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராட போலீசார் தடை விதித்துள்ளனர்.