சென்னை ஆவடியில் போதையில் போலீசாரை தாக்க முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் கட்டையைக் கொண்டு நையப்புடைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் சாலைகளில் செல்பவர்களிடம் தகராறு செய்து வந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை துரத்தி பிடிக்க முயன்றபோது, போலீசாரை கல் வீசி தாக்க முயன்றார்.
பதிலுக்கு, காவலர் ஒருவர் அந்த இளைஞரை கட்டைக் கொண்டு அடி வெளுத்தெடுத்தார். இது தொடர்பான வீடிேயா காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.