தென் தமிழ்நாட்டில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளது தமிழக மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக, மே மாதத்தில் தொடங்கும் உச்ச வெப்பத்தின் தாக்கம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களை மகிழ்விக்கும் விதமாக, தென் தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இன்று தென் தமிழக கடற்கரை பகுதிகளில், குறிப்பாக, குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், கேரளா, லட்சத்தீவு மேற்கு மற்றும் தென் இலங்கை கடலோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
மேலும், கோவை, ஈரோடு பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.