தமிழகத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்ய நாள்தோறும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைப்பதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் என்பதால் தற்போது மின் தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2ஆம் தேதி 20 ஆயிரத்து 830 மெகா வாட்டாக மின்தேவை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
தற்போது காற்றாலை சீசன் துவங்கியுள்ளதால், இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.