தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல், படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைக்க வேண்டும், பொதுமக்கள் யாரும் கடலில் குளிக்க செல்ல கூடாது என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அறிவுறுத்தியுள்ளார்.