புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூரில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய பேரணி, பல சாலைகளை கடந்து நஞ்சப்பா பள்ளியை வந்தடைந்தது.
அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட பலரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி, அவிநாசியில் நிறைவடைந்தது.