காஞ்சிபுரம் மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சந்தைக்கு சிவபுரம், தர்காஸ், கேசவபுரம், புரிசை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூக்கள் வருகின்றன. தற்போது மல்லிகைப்பூ சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது.
எனவே மல்லிகைப்பூ விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ மல்லிகைப்பூ 180 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.