கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டிய இரண்டாம் இராஜராஜனின் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை இரண்டாம் இராஜராஜன் என்னும் சோழ மன்னன் தனது ஆட்சி காலத்தில், தாராசுரத்தில் புகழ் பெற்ற ஐராவதீஸ்வரர் ஆலயத்தை கட்டினான்.
இந்த கோவிலை கட்டிய இரண்டாம் ராஜராஜனின் பிறந்த தினம் சித்திரை மாதம் உத்திரட்டாதி என திருமணிக்குழி என கோவிலின் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அதன்பேரில், இரண்டாம் இராஜராஜன் பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.